வங்கித்துறை ஏகபோகம்!

லெவ் லியோண்டியோவ். கேள்விப்படாத பெயராக இருக்கிறதே, என்று நினைக்கிறிர்களா?

இவர் ஓரு சோவியத் பொருளாதர மேதை. இவர் எழுதியது- அரசியல் பொருளாதாரம்-சுருக்கமான பாடத்திட்டம், என்ற புத்தகம்.

இந்த புத்தகத்தின், தமிழ் மொழிபெயர்ப்பை, 1975-ஆம் ஆண்டு, ஓருங்கினைந்த சோவியத் ரஷ்ய நாட்டின் முன்னேற்ற பதிப்பகம், தமிழில் வெளியிட்டு இருக்கிறது.

அந்த புத்தகத்தின், பக்க எண்கள் 177-178, 179-ல் உள்ளதை, அப்படியே, இடைச்செருகல், மாற்றம் இல்லாமல், கீழே பதிவு செய்திருக்கிறேன்.

பக்க எண்கள் 177-178-ல் உள்ளவற்றின் பதிவு-

வங்கித் துறை  ஏகபோகங்கள் உருவாதல்

ஏகபோகங்களுக்கு உண்மையில் இருந்து வரும் ஆதிக்க அதிகாரத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமாயின், வங்கிகளுடைய பாத்திரத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தைக் கவனித்தாக வேண்டும்.

தொழில் துறையைப் போலவே வங்கித்துறையிலும் தடையற்ற போட்டியானது ஓன்றுகுவிப்புக்கு இட்டுச் செல்கிறது. வங்கிகளின் எண்ணிக்கை குறைகிறது, அதேபோது அவற்றின் பருமனும் கொள்வினை கொடுப்பினையும் அதிகரிக்கின்றன.  விரல்விட்டு எண்ணக்கூடிய ஓரு சில மிகப் பெரிய வங்கிகள் முன்னிலைக்கு வருகின்றன.  இலாபம் ஈட்டும் முறையில் முதலீடு செய்யப்பட வேண்டிய பிரம்மாண்டமான தொகைகளை இவை திரட்டிக் கொண்டு விடுகின்றன.

 

தொழில் துறையைப் போலவே வங்கித்துறையிலும் ஓன்று குவிப்பானது, ஏகபோகங்கள் உருவாவதற்கு வகை செய்கிறது. பணச்சந்தையில் ஏகபோக நிலை பெற்றுக் கொண்டுவிடும் ஓரு சில மிகப் பெரிய வங்கிகள் வங்கித் துறையில் தலைமைப் பங்கு ஆற்றத் தொடங்குகின்றன. .

 

உதாரணமாய் அமெரிக்க ஐக்கிய  நாட்டில், மிகப் பெரியவையான 50 வாணிப வங்கிகள், நாட்டிலுள்ள வங்கிகளின் மொத்த எண்ணிக்கையில் 0.5 சதவீதமே ஆன இவை, வைப்புத்தொகைள் யாவற்றிலும் 47.4 சதவீதத்துக்கும், அளிக்கப்படும் கடன்களில் 47.8 சதவீதத்துக்கும் பொறுப்பனவையாய் இருக்கின்றன.

 

இத்தாலியில் கடன் வசதி நிறுவனங்களில் 1.5 சதவீதமே ஆன ஆறு பெரிய வங்கிகள் மொத்த வைப்புத் தொகைகளில் 62 சதவீத த்தைத் தம்மிடம் குவியச் செய்து கொண்டுவிட்டன, கடன்களில் 62 சதவீதமானவற்றை அளிக்கின்றன.

 

பணச்சந்தையைத் தமக்குக் கீழ்ப்படுத்திக் கொண்டதும் வங்கித் துறை ஏகபோகங்கள் எல்லாச் சேமிப்புகளையும் தம் பிடிக்குள் கொண்டு வர முயலுகின்றன.  நிதித்துறையில் இவை தமது அதிகார வலிமையை உயர்த்திக் கொள்கின்றன.  இன்சூரன்ஸ் கம்பெனிகளுடன் நிதி அளிப்புக்கழகங்களுடனும் முதலீட்டு நிறுவனங்களுடனும் பிணைப்புகள் நிறுவிக் கொள்கின்றன. இந்த நிதி நிறுவனங்கள் குறிப்பிட்ட  துறையில் ஆதிக்கத்திலுள்ள ஏதேனும் ஓரு வங்கித் துறை ஏகபோகத்தின் கிளையமைப்புகளாக்காப்படுகின்றன.  இன்சூரன்ஸ் கம்பெனிகள் பிரம்மாண்டத் தொகைகளிலான பணத்தை திரட்டிக் கொள்கின்றன.

கடந்த சில பத்தாண்டுகளில் பென்ஷன் சட்டங்கள் இயற்றப்பட்டதைத் தொடர்ந்து பென்ஷன் நிதிகள் தவக்கப்பட்டு, பெருந் தொகைகளிலான பணம் இக்கணக்குகளில் திரட்டப்படுகின்றன.  உழைப்பாளி மக்களின் கூலிப்பணத்திலிருந்தும் சம்பளங்களிலிருந்தும் வெட்டித் திரட்டப்படும் தொகைகள்தான் இந்தப் பணத்துக்கான பிரதான ஆதாரமாகும்.

 

பக்க எண் 179-

ஆதியில் வங்கிகள் பணத் தொகைகள் செலுத்தப்படுவதில் இடைத்தரகர்களாகவே செயல்பட்டு வந்தன.  ஆனால் முதலாளித்துவம் வளர்ச்சியுற்றதும் வங்கிகளுடைய கடன் அளிப்பு நடவடிக்கைகள் விரிவடைந்து, வங்கிகள் மூலதன வணிகர்களாயின.  முதலாளிகளுக்கு வங்கிகள் குறுங்காலக் கடன்கள் அளிக்க முற்பட்டன.  வைப்புத்தொகைகள் அதிகமாகியதும் வங்கிகள் தொழில் துறையுடன் நெருங்கிய இணைப்புகள் கொண்டன.

வங்கித்துறை, தொழில்துறை ஏகபோகங்களின் அதிபர்களிடையே இவ்விதம் நேரடியான பிணைப்பு உண்டாகிறது.

வங்கிகளின் நெறியாளர்கள் தொழில் நிலையங்ளின் நிர்வாகத்தில் பங்கெடுத்துக் கொள்கிறார்கள்.  அதேபோது தொழில் துறை ஏகபோகங்களின் பிரதிநிதிகள் வங்கிகளின் ஆட்சிக் குழுக்களில் இடம் பெறுகிறார்கள்.

வங்கித் துறையிலும் தொழில் துறையிலும் வாணிபத்திலும், அதாவது முதலாளித்துவப் பொருளாதாரத்தின் மிகப் பல்வேறுபட்ட கிளைகளிலும் செயல்படும் மிகப் பெரிய ஏகபோக கூட்டுகளிலும் அதே ஆட்கள் அதிபர்களாகிவிடுகிறார்கள்.


 

போன நூற்றாண்டில் வாழ்ந்த, சோசலிச பொருளாத மேதை-லெவ் லியோண்டியோவ், கூா்ந்து கவனித்து, கணித்து எழுதியது, இன்றும் பல நாடுகளின், பொருளாதரப் போக்குக்கு, பொருந்துவது, ஆச்சாியமான உண்மை.

 

 

சிலப்பதிகாரம்-அறிமுகம்

 
தமிழின் ஐம்பெரும் காப்பியங்கள்
1.சிலப்பதிகாரம்.
2.மணிமேகலை.
3.சீவகசிந்தாமணி.
4.வளையாபதி.
5.குண்டலகேசி.
தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம். சிலப்பதிகாரம் என்று சொல்வதை விட, கண்ணகியின் கதை என்று சொன்னால் அனைவருக்கும் தெரிந்து விடும்.
இந்நூல் சங்ககாலத்துக்கு, பிற்பட்ட காலத்தில் இயற்றப்பட்டது. இயற்றியவர் – இளங்கோவடிகள். சேர மன்னன், செங்குட்டுவனின் இளைய சகோதரர்.
இந்நூலானது 1.புகார்காண்டம், 2.மதுரைக்காண்டாம், 3.வஞ்சிக் காண்டம், என்று, மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

சிலம்பினால் உருவானாதல், இதற்கு சிலப்பதிகாரம் என்று இளங்கோவடிகள் பெயரிட்டார்.

தனவணிகன் கோவலன்,  மாதவி என்ற நடன மங்கையின் மேல் கொண்ட மோகத்தால், தன் செல்வத்தை எல்லாம் இழந்து விடுகிறான். புகார் நகரிலிருந்து, அவனும், அவன் மனைவி கண்ணகியும், மதுரைக்கு, கண்ணகியின் சிலம்பை விற்று, புது வாழ்வைத் தொடங்க, மதுரை நகரம் வருகிறார்கள். மதுரை மன்னன் பாண்டியன், கோவலன் கொண்டு வந்த சிலம்பு, திருட்டுச் சிலம்பு என்று தவறாக எண்ணி, அவனைக் கொன்று விடுகிறான். அதை அறிந்த கண்ணகி, தன் கணவன் குற்றமற்றவன் என்று நிருபித்து, பாண்டியன் கொடுத்த தவறான தீர்ப்புக்காக, அவன் தலைநகரான மதுரையை தன் கற்பு நெருப்பால் எரித்து விடுகிறாள்.