தமிழின் ஐம்பெரும் காப்பியங்கள்
1.சிலப்பதிகாரம்.
2.மணிமேகலை.
3.சீவகசிந்தாமணி.
4.வளையாபதி.
5.குண்டலகேசி.
தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம். சிலப்பதிகாரம் என்று சொல்வதை விட, கண்ணகியின் கதை என்று சொன்னால் அனைவருக்கும் தெரிந்து விடும்.
இந்நூல் சங்ககாலத்துக்கு, பிற்பட்ட காலத்தில் இயற்றப்பட்டது. இயற்றியவர் – இளங்கோவடிகள். சேர மன்னன், செங்குட்டுவனின் இளைய சகோதரர்.
இந்நூலானது 1.புகார்காண்டம், 2.மதுரைக்காண்டாம், 3.வஞ்சிக் காண்டம், என்று, மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
சிலம்பினால் உருவானாதல், இதற்கு சிலப்பதிகாரம் என்று இளங்கோவடிகள் பெயரிட்டார்.
தனவணிகன் கோவலன், மாதவி என்ற நடன மங்கையின் மேல் கொண்ட மோகத்தால், தன் செல்வத்தை எல்லாம் இழந்து விடுகிறான். புகார் நகரிலிருந்து, அவனும், அவன் மனைவி கண்ணகியும், மதுரைக்கு, கண்ணகியின் சிலம்பை விற்று, புது வாழ்வைத் தொடங்க, மதுரை நகரம் வருகிறார்கள். மதுரை மன்னன் பாண்டியன், கோவலன் கொண்டு வந்த சிலம்பு, திருட்டுச் சிலம்பு என்று தவறாக எண்ணி, அவனைக் கொன்று விடுகிறான். அதை அறிந்த கண்ணகி, தன் கணவன் குற்றமற்றவன் என்று நிருபித்து, பாண்டியன் கொடுத்த தவறான தீர்ப்புக்காக, அவன் தலைநகரான மதுரையை தன் கற்பு நெருப்பால் எரித்து விடுகிறாள்.

